முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை

360 0

சேலம் மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த கிராமத்திற்கு செல்கிறார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரையில் நடைபெறும் ஒரு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பிற்பகல் 1.30 மணியளவில் சேலம் மாவட்டத்திற்கு வருகிறார்.

தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி தனது தாயை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமத்தை முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமியின் மனைவி எம்.ஜெயலெட்சுமி நேற்று இறந்தார். முத்துசாமி எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஆவார்.

இதனால் அவரது வீட்டிற்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முத்துசாமி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் . பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு வருவதையொட்டி அவர் செல்லும் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment