நாளை அப்பா வருவாரா?

1983 0

தனது பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்துள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளளைகள் வழிமேல் விழிவைத்து அப்பாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வரும் ஆனந்தசுதாகரனின் அன்பு மனைவி யோகராணி கணவனின் விடுதலைக்காய் காத்திருந்து நோய்வாய்ப்பட்டு கடந்த மாச்15 ஆம் திகதி உயிரிழந்தார்.

இறுதி நிகழ்வு 18 ஆம் திகதி  கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்பதற்கு ஆனந்தசுதாகர் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட போது தந்தையின்  சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய  அவரது 08 வயது மகளை பார்த்த  பலரும்  சோகத்தில் ஆழ்ந்தனர்.

தாயை இழந்த பிள்ளைகள் தந்தையும் பிரிந்துள்ள கொடுமையினை கண்டு சமூக ஆர்வலர்கள் , அரசியல்வாதிகள் கட்சி பேதம் இன்றி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா இருவரும் தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என சிறிலங்கா ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்டுக்கொண்டனர்.

தங்களது அப்பா சித்திரை வருடபிறப்பிற்கு தம்மிடம் வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன்  இருக்கின்றார்கள்.  இலகு காத்த கிளியைப்போல அந்த கிளிகுஞ்சுகளின் நாட்கள் கடந்து விடுவா? என அஞ்சத் தோன்றுகின்றது.

சித்திரை வருடப்பிறப்பை வரவேற்க கிளிநொச்சி எங்கும் வெடிகொழுத்துகின்றார்கள் அந்த வெடிச் சத்தங்கள் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கொழுத்தப்பட்ட வெடிகளாக பிஞ்சு உள்ளங்களை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கின்றன……

நாளை அப்பா வருவாரா?

Leave a comment