40 ஆண்டுகளாக தீவில் தனித்து வாழும் பெண்!

273 0

கனடாவின் அருகே அமைந்துள்ள Sable தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 மைல்கள் நீளம் கொண்ட இந்த தீவில் கடந்த 40 ஆண்டுகளாக 67 வயதாகும் Zoe Lucas என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார். குறித்த தீவில் 400 குதிரைகளும் 350 பறவை இனங்களும் இவரோடு வாழ்ந்து வருகின்றன.

தம்மை ஒரு இயற்கையியலாளர் என கூறிக்கொள்ளும் Zoe Lucas குறித்த தீவில் தனித்து வாழ்வதாக ஒரு எண்ணம் தமக்கு இதுவரை வந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு 21 வயதாகும்போது முதன்முறையாக இந்த Sable தீவில் ஆராய்ச்சிக்காக வந்ததாகவும் இங்குள்ள குதிரை இனங்களை பார்த்த பின்னர் அதுவரை தமக்கிருந்த திட்டங்களை மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளாக தீவில் தனித்து வாழும் பெண்!

குறித்த தீவில் ஆண்டுக்கு 125 நாட்கள் பனி மூடியபடியே இருக்கும் என கூறும் அவர் இப்பகுதியில் 300 இற்கும் அதிகமான கப்பல் விபத்துகள் நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கு கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் குடியிருந்துவரும் Zoe Lucas வாரத்துக்கு ஒருமுறை தமக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வரவழைத்துக் கொள்கிறார்.

பல ஆண்டுகளாக இவர் சேகரித்து வைத்துள்ள குதிரைகளின் மண்டை ஓடுகள் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு மேற்கொள்ள பேருதவியாக அமைந்துள்ளது என பாராட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இங்குள்ள கடற்கரையில் குவியும் குப்பைகளையும் இவர் தினமும் அகற்றி வருவதால் கடலில் குவியும் குப்பைகளின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கனடாவின் Halifax மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இந்த தீவினை அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் கனடாவுடன் எந்த தொடர்பும் இன்றி தனித்தே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment