அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி

245 0

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சியை முறைப்படி பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். பின்னர் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் ஆளுநர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷண்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டிடத்தை திறந்து வைத்து மோடி பேசுகையில் தமிழக மக்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ‘‘புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க அரசுக்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

நாட்டிலேயே மிகப் பழமை வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை இது. புதிதாக 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இந்தியாவில் அமைய உள்ளன. அதில்  புற்றுநோய் சிகிச்சை பிரதானமாக இருக்கும். வீடுகளுக்கு அருகிலேயே நோய்த்தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் மருத்துவக் கொள்கை. தமிழகத்திற்கு நிதியை குறைத்துவிட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்’’ என்றார்.

Leave a comment