மேள தாள மங்கல வாத்தியங்களுடன் ஆரம்பமான யாழ் மாநகர சபையின் கன்னியமர்வு!!

329 0

யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்றையதினம்(11-04-2018) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.இந்நிலையில் முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கல வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர்.தொடா்ந்தும் முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கன்னி உரைகள் இடம்பெறவுள்ளன.யாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு, கடந்த மாதம் 26 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது யாழ்.மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டதுடன், பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment