யாழில் புகையிரதத்துடன் மோதிய பிக்கப்!! ஒருவர் படுகாயம்!

215 0

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் புகையிரதம் மற்றும ஆர்டிஏ (RDA)க்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. தவசிக்குளம் வீதியில் இருந்து வருகை தந்த, பிக்கப் வாகனம் தண்டவாளத்தைக் கடந்து ஏ9 பிரதான வீதிக்கு வரும் போது, காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் மோதியுள்ளது.இதனால், வாகனத்தில் பயணித்த 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். இவர் சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை. படுகாயமடைந்தவர் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொடிகாமம் காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment