இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் இந்திய, சுவீடன் நாட்டு முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலை மூலம் மரவள்ளி மாவாக்கப்பட்டு அதனூடாக சீனி உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில் மரவள்ளிப் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. 6 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் இப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

