சிரியாவில் வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

284 0

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் நேற்று கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment