இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது

2546 33

இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது.

 சொஹான் சேனாநாயக்க, என்ற குறித்த இலங்கையர் தனது உயிரையும் துச்சமாக மதித்து பெண்ணொருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை, மெல்பேர்ன் ரயில் நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து சொஹான் சேனாநாயக்க, இவ்வாறு விபரிக்கின்றார்;

இந்த துணிச்சல்மிக்க காரியத்தை புரிந்தவர்கள் இருவருக்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

அபாயகரமான சூழலில் துணிச்சலை வெளிப்படுத்துபவர்களுக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது குறித்து கருத்து தெரிவிக்கும் சேனாநாயக்க;

“ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை முக்கியமானது, ஒரு உள்ளுணர்வின் அடிப்படையிலேயே குதித்து அவரைக் காப்பாற்றினேன். இது இன்னொரு மனித உணர்வு என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே என்னால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.”

“மேலும் இவ்விருதை பெறுவதை சிறப்பாக கருதுகின்றேன்”,  எனக் குறிப்பிட்டார்.

Leave a comment