குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நேபாள பிரதமர் சந்திப்பு

223 0

இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

நேபாள பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற சர்மா ஒலி மூன்று நாட்கள் பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்தடைந்த அவரை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எஸ்.பி. சுக்லா ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சர்மா ஒலி சந்தித்து பேசினார்.

அவரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினார். இந்தியா-நேபாள நட்புறவுக்கு சர்மா ஒலியின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

‘இந்தியா-நேபாளம் இடையில் இருப்பதுபோன்ற நட்புறவு மற்றும் ஒத்துழைப்பானது உலகின் வேறு எந்த நாடுகளுக்கு இடையிலும் இருக்காது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளத்தில் இந்தியா நிலையான அக்கறை கொண்டுள்ளது. நேபாளத்துடனான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க இந்தியா தயாராக உள்ளது’ என்றும் குடியரசு தலைவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a comment