குட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு

327 0

201609080315002212_us-likely-to-make-sale-of-guardian-drones-to-india-officials_secvpfகடல்சார் கண்காணிப்புக்காக ’கார்டியன்’ அதிநவீன ஆள் இல்லாத குட்டி விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் விவகாரத்தில் அமெரிக்கா சாதகமான முடிவை அமெரிக்கா எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியா திகழும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமைவை சந்தித்து பேசிய பின்னர் குறிப்பிடப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக அமெரிக்காவின் பிரிடேட்டர் கார்டியன் என்னும் அதிநவீன ஆள் இல்லாத குட்டி விமானங்களை வாங்குவதற்கு இந்தியா விரும்பியது. இதுபற்றி அமெரிக்கா கடந்த 2 ஆண்டுகளாக எந்த உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. இந்திய கடற்படை 22 எண்ணிக்கையிலான பிரிடேட்டர் கார்டியன் ரக ஆள் இல்லாத குட்டி விமானங்களை வாங்குவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை கடந்த பிப்ரவரியில் பாதுகாப்பு துறைக்கு அனுப்பியது.
இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சென்ற ராணுவ மந்திரி பாரிக்கர் அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டரை சந்தித்தபோது பிரிடேட்டர் கார்டியன் ரக ஆள் இல்லாத குட்டி விமானங்களை வாங்குவது பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளி இந்தியா என்று ஒபாமா அறிவித்த பின்பு இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கா எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இருப்பினும் இந்தியாவின் கடல்சார் கண்காணிப்புக்காக 22 எண்ணிக்கையிலான பிரிடேட்டர் கார்டியன் ரக ஆள் இல்லாத குட்டி விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த ரகவிமானம் ஒன்றின் விலை 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.26 கோடி) ஆகும். ஜனவரி மாதம் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக இதற்கான உள் விவகார பணிகளை முடித்துவிட வேண்டும் என்று வெள்ளை மாளிகை, பெண்டகன் மற்றும் முக்கிய அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.