கம்மம்பிலவுக்கு அமைச்சுப் பதவி? ரணில் மஹிந்தவிடம் தெரிவித்தது உண்மையா?

7446 0

வதந்திகளுக்கு தான் பதிலளிக்கத் தேவையில்லையென பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டது உதய கம்மம்பில எனவும், இதனால், இவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றை வழங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது உண்மையானதா? என கம்மம்பில எம்.பி. யிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எனக்கு அப்படியொரு பேச்சை ரணில் சொல்லவும் இல்லை. மஹிந்த சொல்லவும் இல்லை. இதனால், இது ஒரு வதந்தி மாத்திரமே. எனது 17 வருட அரசியல் வாழ்வில் ஒருபோதும் வதந்திகளுக்கு பதிலளித்ததில்லை. வழங்கப் போவதும் இல்லை எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Leave a comment