சிவில் அணுசக்தி ஒப்பந்தம் – ஜப்பான் – இந்தியா

353 0

201609080713078683_narendra-modi-shinzo-abe-review-progress-in-civil-nuclear_secvpfசிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் நாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அப்போது அவர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா-ஜப்பான் இடையே செய்து கொண்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, இந்தியாவுக்கான அதிவேக ரெயில் திட்டம் உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவின் உள் கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ஜப்பான் அளித்து வரும் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும். ஜப்பானிடம் தொழில்நுட்ப அறிவு, புதிய கண்டுபிடிப்புகள் இருப்பது போல இந்தியாவிடம் இளைஞர்களின் ஆற்றல், வியாபார சந்தை உள்ளது. இதன் மூலம் இரு நாட்டின் நட்பு மென்மேலும் வெற்றி பெறும் என்றார்.

மேலும் ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியில் இறந்தவர்களுக்கும், வங்காளதேச குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமரிடம் தெரிவித்தார்.

பின்னர் ஜப்பான் பிரதமர் அபே கூறுகையில், தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஜப்பான் எப்போதும் ஆதரவாக இருக்கும். ஜப்பான்-இந்தியா கலாசார ஒப்பந்தம் ஏற்படுத்தி அடுத்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இந்தியர்கள் அதிக அளவில் ஜப்பானுக்கு சுற்றுலா வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

இது தவிர இரு நாட்டு தலைவர்களும் இந்தியாவில் ஜப்பான் தொழில் பூங்கா விரைவில் அமைப்பது, வர்த்தகம், ஆசிய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சினை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர் என்று மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சுவரூப் தெரிவித்தார்.