முடிவு எவ்வாறு அமைந்தாலும் அமைச்சரவையில் நாளை அதிரடி மாற்றம்!! ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு!!

261 0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு எவ்வாறு அமைந்தாலும், நாளை (வியாழக்கிழமை) அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் நேற்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜனாதிபதியை நேற்றைய தினம் சந்தித்திருந்தனர்.

இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் மனசாட்சியின் பிரகாரம் வாக்குளிக்குமாறு தாம் சுதந்திரக் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியை சுதந்திரக் கட்சியினர் நேற்று இரவும் சந்தித்தனர். இதன்போது, அரசாங்கத்தை பாதிக்காத வகையில் தீர்மானம் எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாட்டின் அரசியல் களத்தில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. குறித்த பிரேரணை மீதான விவாதம், நாடாளுமன்றில் இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment