கண்டக்கழலைக்கான நவீன சத்திரசிகிச்சை – நிறைவேற்றியது யாழ் போதனா வைத்தியசாலை!

3237 0

இலங்கையில் 2 ஆவது தடவையாக தொண்டையில் ஏற்படும் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையின் காது,மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை வைத்தியநிணர்.பா.திருமாறன் அவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் போதனாவைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை வைத்திய நிணரான.பா.திருமாறன் அவர்களாலும் அவரது குழாமினாலும் தொண்டையில்ஏற்படும் கண்டற்கழலைநோய்க்கான நவீனசத்திரசிகிச்சையானது முதன் முதலில் கடந்த 15.03.2018 அன்று 41 வயதுடைய நபருக்கு யாழ்போதனா வைத்தியசாலையில்வெற்றிகரமாகமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சத்திர சிகிச்சையானது இலங்கையில் 2 ஆவது தடவையாகசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இச்சத்திரசிகிச்சையானது தொண்டைப் பகுதியில் எவ்விதகாயங்களும் ஏற்படாதுசெய்யப்படுவதனால் தொண்டைப் பகுதியில் எவ்வித தழும்புகளும் ஏற்படாது.

இதன்மூலம் இளம்பராயத்தினருக்குஏற்படும் உளப்பாதிப்பு அற்றுப்போகும்.

மேலும் நோயாளிகளுக்கும் இச்சத்திரசிகிச்சை மூலம் ஏற்படும் வலிமிக குறைவாக இருப்பதுடன்பூரண சுகமடைதல் விரைவாகுமென என மேற்படி வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சத்திரசிகிச்சையினை நிறைவு செய்த நோயாளிகள் குறிப்பிடுகையில் இச்சத்திரசிகிச்சையினால் தமக்கு எவ்வித வலிகளும்ஏற்படவில்லையெனவும், இதன்மூலம் தங்களுக்கு எவ்வித தழும்புகளும் தொண்டைப்பகுதியில் ஏற்படாதிருப்பது மிகுந்த சந்தோசத்தினை ஏற்படுத்தியுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் எம்மைப் போன்ற நோயாளிகள் இம்முறை மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்வது சிறந்தது எனவும்குறிப்பிட்டுள்ளனர்

மேலும் 29.03.2018 ஆம் திகதி 40 வயாதான நபர் ஒருவருக்கு யாழ்போதனா வைத்தியசாலையில் 2 ஆவது தடவையாக இச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாகசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நவீன முறையிலான சத்திர சிகிச்சைக்கான பயிற்சியினை இவ்வைத்தியநிபுணர் பாங்கொக்கில்(தாய்லாந்தில்) பெற்றுக்கொண்டார் என்பதும்குறிப்பிடப்படத்தக்கது.

இச்சத்திரசிகிச்சையானதுஉலகளாவிய ரீதியில்பிரபலமாகும் அதே வேளை இவ்வைத்தியசாலையிலும் கண்டற்கழலைக்காக தழும்புஏற்படாத வகையில் இவ் நவீனசத்திர சிகிச்சையானது செய்யப்பட்டுள்ளமை பாராட்டுதலுக்குரியதாகுமென வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. த.சத்தியமூர்த்தி அவர்கள்தெரிவித்துள்ளார்.

Leave a comment