வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் உப தவிசாளர் தேர்வின்போது போட்டியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கே தான் வாக்களிக்காத சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (29) நடைபெற்றது. தவிசாளர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பாக நடைபெற்றிருந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு பகிரங்க முறையில் நடைபெற்றது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பா.சுரேஸ்குமார் என்பவதரு பெயரைப் பிரேரித்திருந்தது. இச் சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 03 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
வாக்கெடுப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்க ஏனைய இரு உறுப்பினர்களான வேட்பாளர் பா.சுரேஸ்குமார் மற்றும் க.சசிதா ஆகியோர் உப தவிசாளர் தெரிவிற்குப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான த.துவாரகனுக்கு வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவர் தனக்கு தானே வாக்களித்திருக்காத நிலையில் வேறு எவரும் வாக்களிக்காததால் வாக்குகள் எதனையும் பெற்றிருக்கவில்லை.

