எகிப்தில் கடந்த மூன்று தினங்களாக அதிபர் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஓட்டு பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.
இந்த தேர்தலில் அதிபர் அப்துல் சிசி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மவுசா முஸ்தபா போட்டியிட்டார்.முதல் 2 நாள் நடந்த தேர்தலில் ஓட்டு பதிவு மிக குறைவாக இருந்தது. இதனால் ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் துறை அறிவித்தது. ஆனாலும், ஓட்டு பதிவு அதிகமாக நடக்கவில்லை.
இதே போல் எதிர்க்கட்சிகளும் பணம் கொடுத்தன. ஆனாலும் கூட ஓட்டு பதிவு தொடர்ந்து மந்தமாகவே இருந்தது. இந்தியாவில்தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே போல் எகிப்து நாட்டிலும் நடந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

