புதிய உள்நாட்டு வருமான வரிச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்

430 0

புதிய உள்நாட்டு வருமான வரிச் சட்டத்தை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரிச் செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவதுடன், குறைந்த வருமானம் உடைய மக்கள் வரியினால் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை களைவதற்கும் ஏதுவாக புதிய சட்டத்தை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக நாட்டின் அரச வருமானம் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால். கூடுதல் வட்டி வீதத்தில் உள்நாட்டு – வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன் பெற்று அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது எனவும் இலங்கையில் வருமானம் அதிகரித்த போதிலும், அதற்கு ஈடாக வரி வருமானம் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வரி செலுத்தும் தகுதி உள்ள அனைவரும் தவறாது வரியை செலுத்துவதற்கு புதிய சட்டம் வழிவகுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment