துருக்கி தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

16899 0

துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார் மற்றும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

அமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்து தனது கவலையை வெளியிட்ட துருக்கி தூதுவர், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கையில் துருக்கி முதலீடு மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திவருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment