இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

6838 0

இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புவியியல் அமைப்பில் அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கே சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Leave a comment