எட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 வீடுகளில் பணம், பொருட்களை கொள்ளையிட்டுத் திரிந்த குழுவொன்றை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, 20 லட்சம் ரூபா பெறுதியான தங்க நகைகளை அடகு வைத்தமைக்கான பற்றுச் சீட்டுக்களையும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், வெலிமடை, ஊவாபரனகம, எஹலியகொட, எல்பிட்டிய, செவனகல, வெல்லவாய உட்பட பல பகுதிகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அம்பிலிப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

