பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றுக்கான விலை நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 09 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சுபர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய விலைகளின் படி 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 126 ரூபாவிற்கும் டீசல் ஒரு லீற்றர் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

