தமிழக அரசை விமர்சனம் செய்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்!

385 0

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசை விமர்சனம் செய்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்வதாக கூறினார். 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
வறட்சியில் இருந்து தமிழகம் மீள துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. வறட்சிக்காக நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான். மீனவர்கள் மீது தமிழக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது. இலங்கை சிறையிலிருந்து 442 மீனவர்களும், ஈரான் சிறையிலிருந்து 40 மீனவர்களும் மீட்கப்பட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது.
தமிழகம் முழுவதும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேட்டூர் அணையில் 15 டிஎம்சி தண்ணீர் தேக்கும் வகையில் தூர்வாரப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்.
தமிழக அரசை விமர்சனம் செய்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 100 ஆண்டு நீடிக்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment