தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம்

223 0

தெதுரு ஓயாவில் ஆடைகள் இல்லாமல் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (22) இரவு 10.00 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் – சிப்பிகலான, மெல்லகெலே பகுதியில் தெதுரு ஓயாவில் மிதந்து கொண்டிருந்த சடலம் தொடர்பில் அப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யார், உயிரிழந்தமைக்கான காரணம் என்பன இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment