விமானத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த பணிப்பெண்!

340 0

உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவின் எண்டேபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.729 என்ற விமானம் தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக கீயே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது. உடனடியாக அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். அந்த பணிப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
விமானத்தில் இருந்து பணிப்பெண் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த உதவிகள் தரப்படும் என்று விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment