லங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதான நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சரத் சந்திரசிறி விதான பல்வேறு அமைச்சுக்களின் செயலாளராகவும் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதே நேரம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய பணிப்பாளராக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.
திறமைவாய்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சந்திரரத்ன பல்லேகம நிர்வாக சேவையில் நீ்ண்ட அனுபவம் பெற்ற ஒருவராவார்.

