அதிவேக பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

205 0

இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை இன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

இதற்கு முன் பல முறை பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனைச் செய்யப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத்துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த வெற்றிக்கு பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினருக்கு வாழ்த்துக்கள் என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a comment