தியவண்ணா ஓயாவில் விபத்துக்கு உள்ளாகியிருந்த BMW i8 ரக சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் பிரசண்ண அல்விஸ் உத்தரவிட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

