நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி!

10 0

அமெரிக்காவில் பெண் விமானி ஒருவர் நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சக ஆண் விமானியால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி இருக்கிறார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக வேலை செய்ய பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இவர்கள் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி மது கொடுத்துள்ளார். அந்த மதுவுடன் மயக்க மருந்தும் கலந்து கொடுத்துள்ளார். இதனால் விமானம் ஓட்டும் போதே அந்த பெண் விமானி மயங்கி விழுந்துள்ளார். விமானத்தை தரையிறக்கிய பின் அந்த ஆண் விமானி, பீனாவை தன் சொந்த அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமை படுத்தி இருக்கிறார். அவருக்கு நினைவு தெரிந்த பின்பே இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்த விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் 6 மாதமாக பல புகார்கள் அளித்தும் விமான நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதனால் தற்போது அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக பீனா வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு முன்பு ஏற்கனவே பெண் விமானிகளை இப்படி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று இவர் கூறியுள்ளார். அந்த பெண்களின் வாக்குமூலம் தன்னிடம் இருப்பதாகவும் பீனா கூறியுள்ளார்.

Related Post

ஜோன்சன் என்ட் ஜான்சன் நிறுவனம் 417 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவு

Posted by - August 24, 2017 0
ஜோன்சன் என்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்ட பெண்ணுக்கு, 417 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.…

வெனிசூலா வெளியுறவு மந்திரி திடீர் ராஜினாமா – அரசியல் நிர்ணய சபை தேர்தலில் போட்டி

Posted by - June 23, 2017 0
வெனிசூலா நாட்டின் வெளியுறவு மந்திரியாக 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர், டெல்சி ரோட்ரிக்ஸ். பெண் தலைவரான இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஏவுகணையை தாக்கி அழிக்கும் எதிர் ஏவுகணை தொழில்நுட்பம்: அமெரிக்கா விரைவில் சோதனை

Posted by - July 8, 2017 0
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் சோதனை செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகள் தயாரிப்பில் வடகொரியா தீவிரம்

Posted by - January 1, 2017 0
சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக வடகொரியா அதிபர் கின் ஜாங் உன் இன்று தெரிவித்துள்ளார்.

சிக்கிம் பயணத்தின் போது புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர் மோடி

Posted by - September 24, 2018 0
சிக்கிம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு இயற்கை எழில்கொஞ்சும் மலைகளை புகைப்படமாக எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Your email address will not be published.