உஸ்பெகிஸ்தானில் திருமணங்களுக்கு இத்தனை கட்டுப்பாடா?

772 0

உஸ்பெகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் திருமணங்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் கொண்டுவந்துள்ளார்.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. தற்போது இங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அங்கு வாழ்பவர்களில் 12.8 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இருந்தாலும் அங்கு திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடைபெறும். அலங்கார கார்கள் அணிவகுப்பு, தடபுடலான விருந்து மற்றும் இசைக் கச்சேரி பரிசுப் பொருட்கள் என அமர்க்களப்படும்.

இது பாமரர் முதல் பணக்காரர்கள் வரை நடைமுறையில் உள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே திருமணத்தில் பல புதிய கட்டுப்பாடுகளை உஸ்பெகிஸ்தான் அதிபர் ‌ஷவ்கத் மிர்ஷியோயேவ் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி திருமணத்தில் 20 கிலோ இறைச்சியுடன் கூடிய உணவு தயாரித்து பரிமாற வேண்டும். திருமணத்துக்கு 150 பேரை மட்டுமே விருந்துக்கு அழைக்க வேண்டும்.

திருமணத்தில் அலங்கார கார்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. இசைகச்சேரி நடத்தலாம். ஆனால் பல பாடகர்களை புக் செய்ய கூடாது.

அதிபரின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இது நல்ல யோசனை. உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். பணம், பொருள் மற்றும் உணவு வீணாவது அதன் மூலம் தடுக்கப்படுகிறது. அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a comment