விண்கலம் மூலம் எரிகல்லை உடைத்து நொறுக்க நாசா திட்டம்

9 0

சூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய பென்னு என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் விண்ணிலேயே அடித்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

சூரியனை ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கின்றோம். பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில் சில எரிகற்கள் பூமியில் வந்து விழுகின்றன.

அதனால் பூமியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாக நாசா விண்வெளிமையம் கண்டுபிடித்துள்ளது. அவ்றில் சில பூமியை தாக்கும் அபாயம் உள்ளது.

தற்போது பென்னு என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகிறது. அது 1600 அடி அகலம் கொண்டது. அது மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அது தற்போது பூமியில் இருந்து 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது. அது பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும்.

எனவே கடந்த 1999-ம் ஆண்டு முதல் இதன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பென்னு என்ற எரிகல்லை விண்ணிலேயே அடித்து உடைத்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக மிகப்பெரிய அணு விண்கலம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு ‘கேமர்’ (சுத்தியல்) என பெயரிடப்பட்டுள்ளது. பென்னு எரிகல் மட்டுமின்றி மற்ற எரிகற்களை உடைத்து நொறுக்க இது பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Posted by - January 6, 2018 0
பறந்து கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சதி? 32 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

Posted by - August 2, 2018 0
அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து உலக தலைவர்களுடன் டிரம்ப் இன்று ஆலோசனை

Posted by - September 19, 2017 0
ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.

முஸ்லிம் இளம் பெண் பாடகிக்கு சமயத் தலைவர்கள் ‘பத்வா’; பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் உறுதி

Posted by - March 15, 2017 0
பொது மேடைகளில் பாடிவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்ணுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்க அம்மானில அரசு உறுதியளித்துள்ளது.

பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை – சுஷ்மா ஸ்வராஜ்

Posted by - August 18, 2017 0
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் வரவில்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published.