ரஷ்யாவில் தங்கம், வைரத்தை மழையாக பொழிந்த சரக்கு விமானம்

11 0

ரஷ்யாவில் சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி) மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை எடுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் சரக்கு பெட்டக கதவில் கோளாறு ஏற்பட்டு திறந்துள்ளது. இதனால் அதிலிருந்த தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று கீழே பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

நடுவானில் ஏர் இந்தியா விமான ஜன்னல் உடைந்த விழுந்ததில் 3 பேர் காயம்!

Posted by - April 23, 2018 0
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னல்கள் ஏர் டர்புலன்ஸ் காரணமாக உடைந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

தமிழக அரசியல் நெருக்கடி – அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும்- நிதிஷ் குமார்

Posted by - February 13, 2017 0
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.…

இங்கிலாந்து- கனடா குழந்தைகள் அதிக நேரம் அழுகின்றன: ஆய்வில் தகவல்

Posted by - April 4, 2017 0
இங்கிலாந்து, கனடா மற்றும் இத்தாலியில் பிறக்கும் குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கடும் மழை – 56 பேர் பலி

Posted by - July 4, 2017 0
சீனாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 56 பேர் பலியாகினர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 22 பேர்…

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்த விபத்தில் 2 பேர் பலி

Posted by - March 12, 2018 0
அமெரிக்காவில் அருகே ரூஸ்வெல்ட் தீவில் போட்டோ கிராபர்கள் சென்ற ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர்.

Leave a comment

Your email address will not be published.