தமிழ், சிங்களம், முஸ்லிம் எனப் பாடசாலைகளை உருவாக்கியதும் இன முறுகலுக்குக் காரணம்

6741 0

இலங்கையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற ரீதியில் தனித்தனி பாடசாலைகளை உருவாக்கியதும் இன முறுகலுக்குக் காரணம் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த பிள்ளைகளை சிங்கள சமூகத்தை சேர்ந்த பிள்ளைகளுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்ற சந்தர்ப்பத்தில் மாணவ சமூகங்களுக்கு இடையில் வலுவான பிணைப்பு இருந்தது.

சமகாலத்தில் மாணவர்கள் தூர விலகி இருக்கிறார்கள் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் கூறினார்.

மாகாண சபை உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தாபா நேற்று தேரரை சந்திக்கச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு சமூகங்களிலும் கடும்போக்கு சிந்தனைகளை உடையவர்கள் இருக்கிறார்கள். எந்தவொரு சமயத்தை பின்பற்றும் சுதந்திரம் சகல இனத்தவர்களுக்கும் இருக்க வேண்டும் என மஹாநாயக்கர் இதனபோது மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைத் துண்டாடுமாறு கோரவில்லை எனவும், சகல இனங்களை சேர்ந்தவர்கள் மத்தியிலும் கடும்போக்குவாதிகள் உள்ளதாகவும் பைஸர் முஸ்தபா இதனபோது தெரிவித்தார்.

Leave a comment