இலங்கையில் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து ஆராய்வு

4515 19

இலங்கையில் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்கொழும்பில் நேற்று இடம்பெற்ற தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுஅலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் வேலைநேர மாற்றம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கையில் பெண்கள் பல துறைகளில் முன்னிலையில் உள்ளபோதும், அது பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் மாற்றமடையவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment