திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ

398 0

திஸ்ஸமகாராம பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் நிறப்பூச்சு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் அருகில் இருந்த இரண்டு கடைகளுக்கு பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளுடன் வீரவில கடற்படை தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment