பொலிஸ் கலாச்சார பிரிவிற்கு புதிய பயிற்சி கட்டிடம்

333 0

கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் கலாச்சார பிரிவு வளாகத்தில் புதிய பயிற்சிக்கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பொலிஸ் மா அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இரண்டு மாடிகளை கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த பயிற்சி கட்டிடமானது 19 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை 5 மாத குறுகிய காலப்பகுதியில் நிறைவடையச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, பொலிஸ் கலாச்சார பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பேராசிரியர் கருணாரத்ன பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

Leave a comment