ஒரு கிராமத்துக்கு மக்கள் உரிமைகளை பாதுகாக்க ஒர் அதிகாரி- அமைச்சர் வஜிர

294 0

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரியொருவரை 14 ஆயிரம் கிராமங்களுக்கு நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

குருநாகல் மல்லவபிடிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்த போதிலும் கட்சியின் உறுப்பினர்களுக்கு நியாயமான முறையில் அவர்களது தேவைகளை கவனிக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். தற்பொழுது எமது கட்சி உறுப்பினர்களுக்காக நாங்களே ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தவிர்க்கும் வகையிலேயே ஒரு கிராமத்துக்கு அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு அதிகாரியை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment