அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவசரகால சட்டம் நீக்கம்- மத்தும பண்டார

442 0

அவசர கால சட்டம் மற்றும் சமூக வலைத்தள தடை நீக்கம் என்பன தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில்  இடம்பெற்ற பதற்ற நிலைமையினால் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டது. அது தொடர்பிலான விசாரணைகள் நடாத்தப்பட்டு அறிக்கை கிடைத்ததன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என குறித்த அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட அதிகமானோர் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளதாகவும், இவர்கள் தூர இடங்களிலிருந்து வருவதற்கு காரணம் என்னவெனவும், ஏதாவது குழு இவர்களை வரவழைத்தார்களா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைகள் நிறைவுறும் வரையில் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை முன்னெடுக்காது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment