தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு!

4 0

வவுனியா – கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.

இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

 

இதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை கீழ்  இறக்கி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு

Posted by - May 22, 2017 0
சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும், தியாகதீபம் அன்னைபூபதியின் 29வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவுகூரலும்! மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்த அனைத்து…

கனடாவின் சில பள்ளிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கற்பிப்பு

Posted by - October 26, 2017 0
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.

மருத்துவர் சிவகணேஷ் (நோர்வே ) , மருத்துவர் பஞ்சலிங்கம் (நோர்வே ) இருவரின் நல்லிணக்கத்துக்கான சேவை

Posted by - July 12, 2017 0
மருத்துவர் சிவகணேஷ் (நோர்வே ) தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் முகமாக சிங்கள பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கடந்த சில வருடங்களாக…

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான வேண்டுகோள்

Posted by - November 15, 2017 0
15.11.2017 ஓபர்கௌசன் யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான அறிவுறுத்தல்.அன்புடையீர் வணக்கம். யேர்மனி டோட்முன்ட் நகரில்…

சுயநிர்ணய உரிமை நோக்கிய பாரிஸ் கருத்தரங்கில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு வேண்டுகிறோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 19, 2017 0
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் எமது சுயநிர்ணய உரிமையிலான நிரந்தர அரசியல் தீர்வு அமைவது ஒன்றே…

Leave a comment

Your email address will not be published.