வெலிகம, மிதிகம பகுதியில் ஆயுதங்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்திய சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து டி 56 ரக துப்பாக்கியும் அதற்கான 10 ரவைகளும், கைக்குண்டு ஒன்றும் போலி அடையான அட்டைகள் மூன்றும் மற்றும் ஹொரோயின் 14500 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மிதிகம பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

