நாட்டின் காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும்.
வடபகுதியில் 40 முதல் 45 கிலோமீற்றருக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
கிழக்கு ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி குறிப்பாக ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வாகரை கடற்கரையோர பகுதிகளின் ஆழமற்ற கடற்பரப்பில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்குகூடும். இடி மின்னலலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

