சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி சபாநாயகர் தலையிடவும்- தினேஷ்

4708 22

சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பொறுப்புள்ள பதவியில் உள்ள சபாநாயகருக்கு தலைமை தாங்க முன்வருமாறு இந்நாட்டு மக்களின் உயிர்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த இனவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த  அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களே விமர்ஷிக்க ஆரம்பித்துள்ளனர். இது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment