இனக்கலவரம் – நாட்டின் நிலை தொடர்பில் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

4871 25

இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல, சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது கருத்துக்களை டுவிட்டர் வலைத்தளம் மூலம் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வெறுப்படைவதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இதுதொடர்பில் தேவையான சட்டநடவடிக்கையை எடுக்குமாறும் ,இலங்கை மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடனும், புத்திசாதூரியத்துடனும் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே​வேளை, மதம், இனம் என்ற காரணத்தால், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், நாம் ஒரே நாடு, ஒரே இனம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், தற்​போ​தைய அசாதாரண சூழ்நிலையை வன்மையாக கண்டிப்பதாகவும், தான் 25 வருடமாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிறந்து வளர்ந்துள்ள போதிலும், புதிய சந்ததியினர் அவ்வாறான நிலையின் கீழ் வாழவேண்டிய அவசியமில்லை என்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பதிவிட்டுள்ளார்

Leave a comment