பேர்லின் வாழ் சிறுவர்கள் , தாயகத்து சிறுவர்களுக்கு மேற்கொண்ட உதவி .

25054 0

மேயர் பாரதி கலைக் கல்விக் கூடத்தின் ஒருங்கிணைப்பில் பேர்லின் நகரில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கராத்தே தற்காப்பு கலை வகுப்பு இன்று யேர்மன் கராத்தே சங்கத்தின் அங்கீகாரத்துடன் Shi Shi No Dojo கராத்தே தற்காப்பு கலை பள்ளியின் கீழ் Sensei Johannes Köster (6.Dan) தலைமையின் கீழ் சிறப்புற வளர்ச்சிகொண்டுள்ளது.

Shi Shi No Dojo – Shito Ryu Karate Do – Berlin சார்பிலும் இப் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவர்கள் சார்பிலும் , தாயகத்தில் அறிவொளி கல்வி நிலையத்தில் கராத்தே பயிலும் போரினால் பாதிக்கப்பட்ட 30 சிறார்களுக்கு புதிய கராத்தே சீருடை மற்றும் அவர்களின் முதலாவது பரீட்ச்சைக்கான கட்டணத்தையும் அன்பளித்துள்ளார்கள். இவ்வாறான செயற்திட்டங்களின் ஊடாக புலம்பெயர் சிறுவர்கள் தாயகத்தில் உள்ள சிறுவர்களின் மீது கவனத்தை ஏற்படுத்தவும் சமூகத்தில் மேனிதநேயம் மற்றும் நல்லெண்ணம் கொண்டவர்களாக உருவாக்கவும் வழிவகுக்கும் என்பதை ஆழமாக நம்புகின்றோம்.

 

Leave a comment