மொரீஷியஸ் நாட்டிலும் தமிழ்மொழியை கற்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம்!

361 0

மொரீஷியஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு துணை அதிபர் தெரிவித்துள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவைக்கு விஜயம் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா மொரீஷியஸ் நாடுகளுக்கிடையே நல்லுறவு வலுவாக உள்ளது. மொரீஷியஸில் 12 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகவே கற்கின்றனர். இதனால் தமிழை எழுதவும் படிக்கவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கைகளை மொரீஷியஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது.மேலும், தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல் சிவராத்திரி உள்ளிட்டவை மொரீஷியஸில் தொடர்ந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a comment