கனடாவில் தமிழ் இளைஞர் மரணம் – குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு!

316 0

கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இம்மானுவேல் சின்னதுரை (17) என்ற இலங்கை தமிழர் டொரண்டோவின் Scarborough-ல் உள்ள Lester B. Pearson Collegiate பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் திகதி சாலையில் சின்னதுரை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு கார்கள் அங்கு வேகமாக வந்த நிலையில் சின்னத்துரை மீது அதில் ஒரு கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சின்னதுரை மீது மோதிய 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்தார். உடன் இன்னொரு காரில் வந்த ஜான் வாஸ் (25) என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இவ்வழக்கில் சிறுவன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவனுக்கு பத்து மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு ஐந்தாண்டுகள் வாகனம் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜான் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவர் தற்போது வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜானும், சிறுவனும் சட்டவிரோதமாக சாலையில் கார் ரேசில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஜான் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு சரியான ஆதரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஜான் வேகமாக சாலையில் கார் ஓட்டியது தவறு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த தீர்ப்பு குறித்து சின்னதுரையின் தந்தை கருத்து கூற மறுத்துவிட்டார்.

Leave a comment