காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

5103 0

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதை அடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மடத்தின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கர மடத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள விஜயேந்திரருக்கு தற்போது 49 வயதாகிறது. இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் இவர் 1969-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி பிறந்தார்.
14 வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் சங்கர மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அதிகமான அனுபவம் உள்ளது. இவர் இளைய பீடாதிபதியாக பதவி ஏற்ற உடனேயே  சந்திரசேகரேந்திர சுவாமிகள் மீது பத்து சுலோகம் அடங்கிய “தசகம்“ எழுதினார்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஸ்ரீவிஜயேந்திர பெயரும் சேர்க்கப்பட்டது. 25-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்காக 2005-ல் கைதாகி விடுதலையானார்.
கடந்த ஜனவரி மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டும் என்றே அவர் அவமதித்ததாக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ஆன்மிக பெரியவர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

Leave a comment