அண்மை நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை பொலிஸார் இதுவரையில் இல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வட்டுவாகல் காணி அளவீட்டு எதிர்ப்பு போராட்டம் அதன் பின்னர் 26ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது நடைபெற்ற மக்கள் போராட்டம் அதன் பின்னர் வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்தமை மற்றும் இன்றையத்தினம் இடம்பெற்ற கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பின் ஓராண்டு நிறைவு போராட்டம் போன்றவற்றில் பொலிஸார் தீவிரமாக கவனம் செலுத்தி இருந்தனர்.
இன்றையத்தினம் கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கபட்டு கண்காணிப்பு மேற்கொள்ளபட்டிருந்தது.
அத்தோடு இராணுவ புலனாய்வளர்கள் அதிகளவில் குவிக்கபட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

