செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப்பெரிய விமானம்

229 0

அமெரிக்காவில் உள்ள தனியார் விமான நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளது. இந்த விமானம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு மிக நீளமாக உள்ளது.

ஸ்ட்ரடோலாஞ்ச் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீட்டம் நீளம் கொண்டது. 6 மிகப்பெரிய என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 எரிபொருள் தொட்டி உள்ளது. அவை அனைத்தும் தனித்தனியாக நிரப்பட்டு சரியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தை குறைந்த வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முழு சோதனை முடிவடைந்த பின் வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்தில் ஸ்ட்ரடோலாஞ்ச் விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment