மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்தும் தப்பியோட்டம்.!

206 0

பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றி அதன் மூலம் மத்திய வங்கி மோசடியைவிட பன்மடங்கு பெரிய மோசடி மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார். அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்தும் தப்பியோடி விட்டார். எனவே அவரை நாட்டுக்கு கொண்டு வராது வெளிநாடுகளில் தங்க வைப்பதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்றிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அவர் வசித்த சிங்கப்பூர் விலாசத்தில் தற்போது இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகவே அவர் தப்பியோடிவிட்டார்.  அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அவரை பிடிப்பதாக இருந்தால் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாட வேண்டும். அர்ஜுன மகேந்திரன் இல்லாது மத்திய வங்கி மோசடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம்.பேரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a comment